இது நம் வரலாற்று வெற்றி: தாலிபன்களை புகழ்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள்

afghanistan taliban alqaeda
By Irumporai Sep 01, 2021 10:07 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

தலிபான்களுக்குக் கிடைத்தது வரலாற்று வெற்றி என அல்கொய்தா தீவிரவாத அமைப்பு பாராட்டியுள்ளது. அமெரிக்க இணையதளமான தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவத்தை விரட்டி தலிபான்கள் வரலாற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.

தி லாங் வார் ஜர்னலுக்கு அல்கொய்தா அனுப்பிய செய்தியில் : காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் புனித குர்ஆனின் வாசகங்களைக் கேட்பதன் மூலம் அவர்களின் இதயம் அமைதி அடையட்டும். நம்பிக்கையற்றவர்களின் தலைமையாக இருந்த அமெரிக்கர்களை அவமானப்படுத்தி, தோற்கடித்த பெருமை, புகழ் எல்லாம் வல்ல இறைவனையே சேரும்.

 ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்காவின் உலகளாவிய மரியாதையைச் சிதைத்து, நீக்கி, அவமானப்படுத்தி, அமெரிக்காவைத் திருப்பி அனுப்பிய பெருமை இறைவனையே சேரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் வசித்து வருகின்றனர். ஆப்கனின் பல்வேறு பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள், வெளிநாட்டு ஆதரவாளர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.

அல்கொய்தா, தலிபான் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் உணர்வு ரீதியாக, உறவு ரீதியாக நெருக்கமானவர்கள். இரு குழுக்களுக்கு இடையே திருமண உறவுகளும் உண்டு. பல்வேறு ஒற்றுமைகளும் உண்டு. அல்கொய்தா மனநிலையோடு ஒத்த நிலையில் இருக்கும் பல்வேறு சிறு தீவிரவாதக் குழுக்கள் தலிபான்கள் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளது.