ஆல்பாஸ் எதிரொலி- நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை
9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. அதனையடுத்து, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்று கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின.
இதேபோல் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
2020 - 2021ம் கல்வியாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.