ஈரல் நோய்களை அறவே குணமாக்க இது மட்டும் போதும்
நம் உடலில் மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்று மிகவும் அத்தியாவசியமான பணிகளை செய்து வருகிறது ஈரல். உடலின் மிகப்பெரிய உறுப்பான ஈரல், வயிற்றுப் பகுதியில் மேற்புறமாக அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி வயிற்றின் வலப்புறமாகவும் சிறுபகுதி இடப்புறமாகவும் பரந்துள்ளது.
உடலின் முக்கிய செயல்பாட்டுக்கு காரணமாக ஈரலை நாம் கண்டுகொள்வதில்லை, துரித உணவுகளையும் சமச் சீரற்ற உணவுகளையும் உட்கொள்வதனாலும், மதுபாவனையாலும், ஈரலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.
இதுதவிர அசுத்தமான நீர், உணவு என்பனவும் ஈரலைப் பாதிக்கக்கூடியன.உடலில் கொழுப்பு அதிகரிக்கும் போதும் ஈரல் பழுதடையும் சந்தர்ப்பம் அதிகரிக்கின்றது. இதற்கு மருந்தாகும் தும்பை இலை கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்.