கடலில் இருந்து வந்த வேற்று கிரகவாசிகள் - பீதியை கிளப்பிய புகைப்படம்!

Viral Photos South Africa
By Sumathi Dec 16, 2022 07:14 AM GMT
Report

வினோத உயிரினங்கள் நடந்து செல்வது போன்ற படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வேற்றுகிரக வாசிகள்? 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜான் வோர்ஸ்டர்(62). இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஸ்டில் பெ கடற்கரையில் காலை மாற்றும் மாலையில் ஒரு குறிப்பிட்ட பொருளை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கடலில் இருந்து வந்த வேற்று கிரகவாசிகள் - பீதியை கிளப்பிய புகைப்படம்! | Aloe Vera Whick Looks Like Alien Viral

மேலும், தென்னாபிரிக்க கடலில் இருந்து வேற்றுகிரக வாசிகள் வெளிவருவதாக அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் இருந்த உருவம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதை வேற்றுகிரக உயிரினம் தான் என நினைத்து இணையவாசிகள் அச்சமடைந்தனர்.

வைரல் ஃபோட்டோ

அதனைத் தொடர்ந்து, அவரே இது வேற்றுகிரகவாசிகள் இல்லை. வெறும் கற்றாழை செடிகளே என்று விளக்கம் தந்துள்ளார். ஒரு ரசனைக்காக, வித்தியாசமான பட அமைப்பிற்காக காலையிலும் மாலையும் மங்கும் வெளிச்சத்தில் அதனை எடுத்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்மை நோக்கம் கொண்டு ஃபேஸ்புக்கில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அது பெரும் பீதியை கிளப்பியது.