ரிலீசுக்கு முன்பே படக்குழுவுக்கு தங்க மோதிரம் பரிசளித்த அல்லு அர்ஜுன்
புஷ்பா படக்குழுவுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் தங்க மோதிரம் பரிசளித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா,ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
சுகுமார் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. புஷ்பா படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
புஷ்பா படத்தின் முதல் பாகம் தான் டிசம்பர் 17 ல் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டுள்ளார் இதற்காக அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடல் காட்சி ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது.பாடல் காட்சியின் ஷுட்டிங் முடிந்த அடுத்த நாளே அந்த செட்டில் இருந்த 12 பேருக்கும் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக 10 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் அல்லு அர்ஜுன் கொடுத்தாராம்.
சொன்ன நேரத்திற்கு முன்பாகவே இந்த பாடலின் ஷுட்டிங்கை முடித்து கொடுத்ததை பாராட்டி தான் டைரக்டர் சுகுமார் உள்ளிட்ட படக்குழுவிற்கு இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil