வாரத்தில் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையினை மீனவர்கள் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சுருக்குமடி வலைக்கு தடை
தமிழக அரசு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில், இதற்கு இடைக்கால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுருக்குமுடி வலையை பொறுத்தவரையில், மற்ற மாநிலங்கள் எப்படி அனுமதி அளிக்கின்றது என தெரியவில்லை தமிழகத்தை பொறுத்தவரையில் கடல் வளம் மற்றும் லட்சக்கணக்கான பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பிரதானமாக உள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
அனுமதி கொடுத்த நீதிபதிகள்
இதனை அடுத்து இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை வாரத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் பயன்படுத்தலாம்.
பதிவு செய்யப்பட்ட படகு மட்டுமே சுருக்கும்படி வலையை பயன்படுத்த வேண்டும். காலை எட்டு மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு மீனவர்கள் திரும்ப வேண்டும்.
மேலும் படகுகளை கண்காணிப்பதற்காக ட்ராக்கிங் கருவியை பொருத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.