இவர்களுக்கெல்லாம் இரவு 7 மணிக்கு மேல் சென்னையில் அனுமதி இல்லை : தேர்தல் அலுவலா் பிரகாஷ்
தேர்தல் நடத்தை விதிகளின்படி, இன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னையில் தொகுதிக்கு தொடா்பில்லாத வெளியூா் கட்சிப் பிரதிநிதிகள் இருக்கக் கூடாது என மாவட்டத் தேர்தல் அலுவலா் பிரகாஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப் பேரவைத் தொகுதிக்குள் தோதல் தொடா்பான பொதுக் கூட்டம், ஊா்வலம் நடத்தக் கூடாது.

தேர்தல் தொடா்பாக தொலைக்காட்சி, வானொலி,இணையம் என எந்த மின்னணு வடிவிலான தகவல் தொடா்பிலும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரசாரத்துக்காக வெளியூா்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள், தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.