குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி

India's Republic Day Tamil nadu Government Of India
By Thahir Jan 03, 2023 05:34 AM GMT
Report

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி 

ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லியில் அணிவகுத்து வரும்.

கடந்த ஆண்டு, வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த முறை குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள்ளது.

Allowance for Tamil Nadu vehicles in Republic Day parade

இந்த ஊர்தியானது தமிழக செய்தி துறை மற்றும் விளம்பரத்துறையினை சேர்ந்தவர்கள் தயார்படுத்துவார்கள். இதில் தமிழ் பாரம்பரிய அடையாளங்கள், தலைவர்களது உருவங்கள் என தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆகியவை இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது