‘‘அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் தெய்வ தூதுவர்கள் ’’ - பாபா ராம் தேவ் யூடர்ன்!

அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் கடவுளின் தூதுவர்கள் என பாபா ராம்தேவ் தற்போது பல்டியடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபாராம் தேவ் அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்றும் தனக்கு கொரோனா தடுப்பூசி தமக்கு தேவை இல்லை என கூறி இருந்தார்.

மேலும், யோகா, ஆயுர்வேத மருந்து மட்டுமே கொரோனா தொற்றுக்கு போதும் எனகூறி இருந்த பாபா ராம் தேவின்  கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து பெரும் சர்ச்சையானது நாம் அறிந்ததே.

இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவர்கள் பூமியில் நடமாடும் கடவுளின் தூதுவர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று என்றுபேசிய பாபா ராம் தேவ் தான் தற்போது தெய்வ தூதர்கள் என பேசியுள்ளார்.

அத்துடன் விரைவில் தாம் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாகவும் பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார்ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்