தொகுதி வழங்குவதில் இழு பறி: காங்கிரஸ் அவசர ஆலோசனை

tamil DMK election party
By Jon Mar 03, 2021 03:50 PM GMT
Report

முக உடனான தொகுதி பங்கீட்டில் இன்னும் முடிவாகாத நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு நாளை கூடுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில் கே.எஸ்.அழகிரி நேற்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என்றார். இந்த நிலையில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் நாளை காங்கிரஸ் அவசர ஆலோசனை நடத்துகிறது. சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ், வீரப்ப மொய்லி, கே.எஸ் அழகிரி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

30 தொகுதிகளில் கேட்கும் காங்கிரஸிற்கு 24 இடங்களை ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் நாளை காங்கிரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.