சூழ்நிலை காரணமாக கமலுடன் கூட்டணி வைத்தோம் : சரத்குமார் விளக்கம்

Kamal Haasan Sarathkumar
By Irumporai 1 வாரம் முன்

சூழ்நிலை காரணமாக மக்கள் நீதி மய்ய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது நிலைப்பாடு என்ன என்பதை செய்தியாளர்களிடம் கூறும் போது கடந்த முறை சட்டப்பேரவை தேர்தல் இந்த தொகுதியில் எங்கள் கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் 10 ஆயிரம் வாக்குக்களுக்கு மேலாக பெற்றார். அதில் எங்கள் பங்கும் உள்ளது எனக் கூறினார்.

சூழ்நிலை காரணமாக கமலுடன் கூட்டணி வைத்தோம் : சரத்குமார் விளக்கம் | Alliance With Makkal Neethi Maiyam Sarath Kumar

சூழ்நிலை காரணமாக கூட்டணி

சில சமயம் சூழ்நிலை காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அப்படிதான் கடைசியாக கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய கூட்டணி கூட சூழ்நிலை காரணமாக வைத்தோம் எனக் கூறிய சரத்குமார் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகவல் தெரிவிப்பதாக கூறினார்.