பாமக பாஜக இருந்தால் அங்கு விசிக இருக்காது - திருமாவளவன் திட்டவட்டம்
பாமக ,பாஜக இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டம் இருக்காது என திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி சர்ச்சை
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனாதான கொள்கை குறித்த பேச்சு தமிழக அரசியலில் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. ஆகவே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்றுசென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பாமக இருந்தால் விசிக இருக்காது
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திருமாவளவன், தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட சனாதான சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம் எழுகிறது என குறிப்பிட்டார். பாஜக தலைவர் அண்ணாமலை, உத்தரவிட பிரதமர் இருக்கிறார்.

சுட்டு தள்ளுங்கள் என பேசுகிறார். இந்நேரம் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு செய்யவில்லை என திருமாவளவன் கூறினார். மேலும், தமிழக அரசே கவனக்குறைவாக இருக்காதீர்கள். சனாதன சக்திகள் தமிழகத்தில் வன்முறையை தூண்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.