இன்று இஸ்லாமாபாத்தில் தற்கொலைப்படை குண்டு வெடிப்புத் தாக்குதல் - உலகை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!

Pakistan Suicide Attack In Pakistan Viral Photos
By Nandhini Dec 23, 2022 08:33 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெற்ற தற்கொலைப்படை குண்டுவெடிப்புத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில்

தற்கொலைப்படை குண்டுவெடிப்புத் தாக்குதல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் I-10 பகுதியில் இன்று தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 3 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்தப் பகுதியில் "சந்தேகத்திற்குரிய வண்டி நின்றபிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் பல போலீசார் காயமடைந்துள்ளனர். ஒரு போலீசார் உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனின் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

alleged-suicide-blast-in-islamabad-islamabad