ராஜினாமா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் - எல்.முருகன் கண்டனம்

Tamil nadu India
By Vinoja Oct 29, 2026 11:18 AM GMT
Report

முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனது ராஜினாமா குறித்து இணையத்தில் பரவி வரும் அவதூறு கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகன், கடந்த 14ஆம் தேதி தனது அமைச்சர் மற்றும் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தார்.

ராஜினாமா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் - எல்.முருகன் கண்டனம் | Allegations Against Me Are Baseless L Murugan

2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக முழுநேரமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவை வலுப்படுத்தவே ராஜினாமா

இதுகுறித்து விளக்கமளித்த அவர், கட்சித் தொண்டர்களுக்குப் பயிற்சி அளித்து, அடிமட்ட அளவில் கட்சியின் அமைப்பையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவதே தனது ராஜினாமாவின் ஒரே நோக்கம் எனக் குறிப்பிட்டார்.

தனது ராஜினாமாவுக்குத் தவறான அர்த்தம் கற்பித்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகும் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பியவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்.முருகன் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.