இனப்படுகொலைக்கு சமம் - உத்திரப் பிரதேச அரசை லாவமகாக அம்பலப்படுத்திய அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்குள் அடங்காமல் செல்வதால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழகின்றன.
ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடுமையான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. மாநிலங்களுக்கு ஆக்சிஜனை ஒதுக்கீடு செய்ய வேண்டிய மத்திய அரசு விரைந்து செயல்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பல்வேறு இடங்களில் உரிய நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் மக்கள் பரிதாபமாக உயிரழண்ட்ஜ சம்பவங்களும் அரங்கேறின.
இது தொடர்பான வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் உயிரழப்பது இனப்படுகொலைக்கு சமம் என உத்திரப் பிரதேச கடுமையாக சாடியிருந்தது.

உ.பி அரசு வெளியிடும் தரவுகளிலும் உண்மையில்லை எனக் கடுமையாக சாடியிருந்தது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக சுவாரஸ்யமான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
உ.பி ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக வழக்கு விசாரணையில் இருந்தபோதே நீதிபதிகள் அரசு வழங்கியிருந்த உதவி எண்களை நேரடியாக அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது எங்குமே படுக்கைகள் இல்லை எனத் தெரியவந்துள்ளன.
ஆனால் அரசு இணையதளத்தில் படுக்கைகள் இருப்பதாக இருந்ததும் தெரியவந்துள்ளது. நீதிபதிகளே நேரடியாக விசாரித்திருக்கும் தற்போது வெளியாகியுள்ளது.