பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்படும் - முக ஸ்டாலின் உறுதி!!
முதலமைச்சர் ஸ்டாலின். எப்படி மகளிர் உரிமைத்தொகையை தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கி வருகிறோமோ, அதேபோல் மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி ரூ.6,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல்காரணமாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 6,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இது குறித்து திமுக செயற்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை விட சென்னையில் 47ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அதிகளவில் மழை கொட்டித் தீர்த்தது என்று சுட்டிக்காட்டினார்.
மழை குறித்த எச்சரிக்கை செய்தார்கள்ஆனால் இவ்வளவு மழை பெய்யும் ஒரு நாள் முழுவதும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்யவில்லை என்றார் முதல்வர் முக ஸ்டாலின்.
நிச்சயமாக வழங்கப்படும்
தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி என்று உறுதிபட கூறி, திமுக ஆட்சியில் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவி செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டி, திட்டமிடப்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது என்று தகவல் அளித்தார்.
மேலும், புயல் மழையினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என்ற முதல்வர் முக ஸ்டாலின், யார் பாதிக்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்கு நிச்சயமாக, உறுதியாக நிவாரணம் வழங்கப்படும் என்று மேடையில் பேசினார்.