ஆபீஸ் விதியை சரியாக பின்பற்றியது ஒரு குற்றமா? 400 பேர் பணிநீக்கம் செய்த வினோத நிறுவனம்!
பிரபல நிறுவனம் ஒன்றில் ஆபீஸ் மீட்டிங் காலில் இருந்த அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆபீஸ் விதி
இத்தாலிய-அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான "ஸ்டெல்லாண்டிஸ்" அமெரிக்காவில் அமைத்துள்ளது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களில் 400 பேரை ஒரே அடியாக பணிநீக்கம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் பொறியியல், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது. அண்மையில் இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்காக ஒரு விதியை அமல்படுத்தியது.
அதனை சரியாக பின்பற்றிய அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த ஸ்டெல்லண்டிஸ் நிறுவனம் மார்ச் 22ஆம் தேதியை கட்டாய ரிமோட் வேலை நாளாக அறிவித்தது.
400 பேர் பணிநீக்கம்
இதற்காகவே ஒரு புதிய விதிமுறையையும் உருவாக்கியது. அதன்படி, இந்த நாளில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் எனவும், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு குறித்து வீடியோ கால் மூலமாக மீட்டிங் நடத்தி அதுபற்றி பேச வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், விதியை மதித்து வீடியோ காலில் வந்த அத்தனை பேரையும் எந்த காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்வதாக அதில் தெரிவித்துள்ளனர். இது குறித்து, வேலை இழந்த ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் பேசுகையில், ஆபீஸ் மீட்டிங் வீடியோ அழைப்பில் இருந்த அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.
இவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு இந்நிறுவனம் இந்தியா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஏனென்றால், இந்த நாடுகளில் செலவுகள் குறைவாக இருப்பதால் நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது, என்றார்.