அண்ணாமலை பேசுவது எல்லாம் கேவலமாக உள்ளது - துரை வைகோ

Marumalarchi Dravida Munnetra Kazhagam Vaiko Tamil nadu
By Thahir Sep 28, 2022 09:43 AM GMT
Report

தமிழகத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நன்கு படித்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பேசுவது எல்லாம் கேவலமாக உள்ளது என வைகோவின் மகன் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மாமனிதன் வைகோ ஆவணப்படம் தயாரிப்பு 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை உள்ளடக்கி ‘’மாமனிதன் வைகோ’’ என்ற தலைப்பில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆவணப்படம் தயாரித்துள்ளார்.

இது 70 நிமிடம் ஓடக்கூடியது. இதன் வெளியீட்டு விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வருகிறது .அந்த வகையில் திருச்சி திருவானைக்காவலை அடுத்த வெங்கடேஸ்வரா திரையரங்கில் தற்போது துரை வைகோ ஆவணப்படத்தை துவக்கி வைத்தார்.

அண்ணாமலை பேசுவது எல்லாம் கேவலமாக உள்ளது - துரை வைகோ | All Talk Of Annamalai Vile Durai Vaiko

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ : பத்திரிகையாளர்கள் சமூகத்தில் முக்கிய அந்தஸ்தில் உள்ள பலர் இந்த ஆவண படத்தை பெரிதும் பாராட்டி உள்ளனர்.

BJP வாக்கு வங்கியை சரி கட்ட பார்க்கிறது

எஸ்.டி.பி.ஐ பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது நீங்கள் தேசிய பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை எடுப்பது சரி ஏன் பிஜேபி ஆதரவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் போன்ற வலதுசாரி இயக்கங்கள் பலவற்றின் மீது நீங்கள் விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.தேசிய பாதுகாப்பு நலன் கருதி விசாரணை என்றால் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

அண்ணாமலை பேசுவது எல்லாம் கேவலமாக உள்ளது - துரை வைகோ | All Talk Of Annamalai Vile Durai Vaiko

அண்ணன் தம்பிகளாக உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் ஒரு பிரச்சினை ஏற்படுத்தி இதில் தங்களது வாக்கு வங்கியை சரி கட்ட பிஜேபி பார்க்கிறது. இதற்கு நாம் யாரும் பலிகடாவாக மாறிவிடக்கூடாது.

வன்முறை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சம் என்று நடவடிக்கை எடுங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குங்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஜாதி மற்றும் மதங்களை வைத்துக்கொண்டு எந்த அரசியல் தலைவர்களும் பேசக்கூடாது அரசியல் செய்யக்கூடாது பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீது இங்கு உள்ள அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவது இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும் என்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு : அவதூறு அண்ணாமலை இது போன்ற பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

மதம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் தற்போது நடைபெற்று வரும் போது இதே நேரத்தில் இதை அண்ணாமலை கூறுகிறார் என்றால் அவர்கள் நோக்கம் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாமலை நன்கு படித்த ஐபிஎஸ் அதிகாரி அவர் இப்படியெல்லாம் பேசுவது மிகவும் கேவலமான செயலாக உள்ளது.