இனி ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு செயலி - அறிமுகம் செய்த ரயில்வே
ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு செயலியாக SwaRail செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் டிக்கெட் கவுண்டருக்கு செல்வதை விட இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவே விரும்புகிறார்கள்.
இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC செயலி, முன்பதிவு இல்லாத ரயில்களில் டிக்கெட் பெற யுடிஎஸ் செயலி, PNR ஸ்டேட்டஸ் செக் செய்ய தனியாக ஒரு செயலி என ரயில்வேயின் சேவைகள் அனைத்திற்கும் தனி தனி செயலிகளை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
SwaRail செயலி
தற்போது அணைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெரும் வகையில் SwaRail என்ற செயலி புதிய செயலியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ரயில்வேக்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்யும் அமைப்பான CRIS இந்த செயலியை தயாரித்துள்ளது.
இந்த செயலியில், முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லா பயணச்சீட்டு, ரயில் நிலையம் உள்நுழைவு நடைமேடை டிக்கெட், பார்சல் தொடர்பான தகவல்கள், ரயில் நேரம் மற்றும் முன்பதிவு தொடர்பான தகவல்கள், பார்சல் தொடர்பான தகவல்கள், உணவு முன்பதிவு, புகார்கள் (Rail Madad) என அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.
தற்போது சோதனைக்காக பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த செயலி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களின் கருத்துகளை பெற்று இந்த செயலியின் சேவை மேம்படுத்தப்பட்டு விரைவில் அணைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி வெளியிடப்படும்.