‘‘அனைத்து காவல்நிலையங்களும் இதை உடனே செய்யுங்கள்" - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

dgp policestation Sylendra Babu
By Irumporai Sep 17, 2021 08:34 AM GMT
Report

காவல் நிலைய பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ள விளம்பரதாரரின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதாவது,தமிழகத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் தனியார் விளம்பரப்பலகைகள் இடம் பெற்றிருப்பது பொதுமக்கள் பார்வையில் தவறான புரிதலை ஏற்படுத்துகிறது,எனவே,அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது,அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும்,அதற்குப் பதிலாக புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.