முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது #Liveupdates
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தற்போது அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது.
அதில் பேசிய ஸ்டாலின், “முதல்வராக பொறுப்பு ஏற்பதற்கு முன்னதாகவே பல்வேறு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அறிவுரைகளை வழங்கியுள்ளேன்; உங்கள் அனைவரின் ஆலோசனைகளை பெற இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம்.
முழு முடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி அரசின் உத்தரவுகளை மீறுகின்றனர். அதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்
கொரோனா தடுப்பு மருந்துகளை கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட உள்ளது. கொரோனா தடுப்பில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது.” என்றுள்ளார்.
பல கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.