இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி - 23-ந் தேதி கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு வரும் 23-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் கடுமையாக சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள நிலையில்,மின் வெட்டும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.283-க்கும் டீசல் விலை ஒரு லிட்டர் 176 - ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் எரிபொருள் பற்றாக்குறையால் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 23-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளது.
இந்த கூட்டத்தில் ஜனதிபதி கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே
மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளனர்.
மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர் IBC Tamil
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan