முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
M K Stalin
By Thahir
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது .
இதில் பங்கேற்க சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இடஒதுக்கீடு வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.