தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் - யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று கூடுகிறது . இதில் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் வருகையால் தேசிய அளவில் கவனம் பெறும் தமிழ்நாடு.
கட்சித் தலைவர்கள்
தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொண்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது என அமித்ஷா கூறினார்.
எனினும், தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படாமல் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களின் தொகுதி உயர்த்தப்படாலும் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பது திமுக உள்ளிட்ட கட்சிகளின் வாதமாக உள்ளது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொகுதி மறுசீரமைப்பின் பணிகள் விரைவில் மத்திய அரசால் துவங்கப்படும் எனக்கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனால் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.
அந்த வகையில் இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ளும் தலைவர்களின் விவரம் பின்வருமாறு:
கேரள முதலமைச்சர் - பினராயி விஜயன்,
தெலங்கானா முதல்வர் -ரேவந்த் ரெட்டி,
பஞ்சாப் முதலமைச்சர் -பக்வந்த் மான் சிங்,
கர்நாடக துணை முதலமைச்சர்- டிகே சிவக்குமார்
மேலும், தெலங்கானா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் தலைவர் கேடி ராமா ராவ்,
பஞ்சாப்பை சேர்ந்த சிரோமணி
அகாலி தளம் கட்சியின் செயல் தலைவர் பல்விந்தர் சிங்,
ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சஞ்சய் குமார் தாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.