Sunday, Jul 20, 2025

இலங்கை அரசியலில் புதிய திருப்பம் : அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு

SriLanka SriLankaCrisis
By Irumporai 3 years ago
Irumporai

Irumporai

in உலகம்
Report

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

மேலும்,பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.குறிப்பாக,13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது.  

இந்நிலையில்,பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ள நிலையில்இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்புவிடுத்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பொதுமக்களின் கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில்  அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் அனைவரும் அளித்ததாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தனர். இலங்கையில் கல்வித்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களோடு அதிபர் கோட்டாபய ராஜபக்சவை, பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்த நிலையில், அனைவரது ராஜினாமாவும் ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.