உக்ரைன் தலைநகரில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேற்றம் - மத்திய அரசு அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதன் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னதாக இதற்கான பணிகளில் இருந்த போது ங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 6வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் படைகள் தாக்கி அழித்துள்ளது. இதற்கு உக்ரைன் மக்களும், ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்துள்ள நிலையில் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்கியுள்ள நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன் வாழ் இந்தியர்கள் அடுத்தடுத்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறி விட்ட நிலையில் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன்20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி இருந்ததாகவும், அதில் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மீதமுள்ளோர் பாதி பேர் சண்டை நடைபெற்று வரும் கார்கிவ் நகரில் உள்ளதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.