முடங்கியதா அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்? - முழு வரலாறு இதோ

Tamil nadu
By Thahir Sep 27, 2022 07:34 AM GMT
Report

மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தோற்றமும் அதன் பின்னணி குறித்த விளக்கமான செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

மூவேந்தர் முன்னணிக் கழகம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி முக்குலத்தோர் சாதியினரிடையே ஆதரவைப் பெற்றுள்ளது.

தொடக்கம் 

மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் சேதுராமன் 1998ல் மூவேந்தர் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.

இக்கட்சியை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் என பல்வேறு பெயர்கள் உள்ளது. 

முடங்கியதா அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்? - முழு வரலாறு இதோ | All India Moovendar Munnani Kazhagam Politicians

தமிழ்நாட்டை பிரித்து தெற்கு மாவட்டங்களை தென் தமிழ் மாநிலம் என்ற பெயரில் தனி மாநிலமாக்க வேண்டுமென்பது இக்கட்சி கொள்ளைகளில் ஒன்று.

கூட்டணி 

கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார் டாக்டர்.ந.சேதுராமன். பின்னர் பார்வர்டு பிளாக் பிளாக் மற்றும் நடிகர் கார்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி உட்பட சில கட்சிகளுடன் இவரது கட்சியும் இணைந்து இந்த தேர்தலின் தனி அணியாக போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

பின்னர் இதையடுத்து அதிமுக, திமுக போன்ற கட்சிகளை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார் சேதுராமன்.

முடங்கியதா அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்? - முழு வரலாறு இதோ | All India Moovendar Munnani Kazhagam Politicians

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது ந.சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம்.

இந்த நிலையில் தமிழக அரசியலில் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் தற்போது அமைதி நிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.