அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் - வரலாறும் பின்னணியும்

Tamil nadu India
By Karthikraja May 30, 2024 10:48 AM GMT
Report

 பார்வார்டு பிளாக் தோற்றம்

அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் கட்சி இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு பிரிவாக தான் முதலில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் தொடங்கப்பட்டது. 1939 ம் ஆண்டு 22 ஜூன் அன்று இது நிறுவப்பட்ட நாளாக கருதப்பட்டாலும், 1938 ம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மகுர் என்ற கிராமத்திற்கு வரும் போதே போஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

subash chandra bose

1939 ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பொழுது காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய, சுபாஷ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். இதில் சேர விரும்புபவர்கள் ஒருபோதும் பின்வாங்க கூடாது என்றும், உறுதிமொழிப் படிவத்தை விரலை அறுத்து ரத்தத்தால் கையொப்பமிட வேண்டும் என்றும் போஸ் கூறினார். பஞ்சாபைச் சேர்ந்த எஸ்.எஸ்.கவிஷார் துணைத்தலைவராகவும், டெல்லியைச் சேர்ந்த லால் சங்கர்லால் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துராமலிங்க தேவரும் இதன் செயலாளராக நியம்பிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பார்வார்டு பிளாகை தடை செய்து இருந்தது. அதே ஆண்டில் பார்வர்டு பிளாக் எனும் இதழை தொடங்கிய சுபாஷ் சந்திர போஸ், தனது புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

இக்கட்சியின் தலைமை அலுவலகமான நேதாஜி பவன் டெல்லியில் அமைந்துள்ளது. இதன் தற்போதைய தலைவராக நரேன் சாட்டர்ஜியும், பொதுச்செயலளராக ஜி.தேவராஜனும் உள்ளனர்.

இதன் இளைஞர் அமைப்பு அகில இந்திய இளைஞர் கழகம் என்றும், மாணவர் அமைப்பு அகில இந்திய மாணவர் தொகுதி என்றும், தொழிற்சங்க அமைப்பு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் என்றும், விவசாயிகள் அமைப்பு அகில இந்திய அக்ரகமி கிசான் சபா என்றும், பெண்கள் அமைப்பு அகில இந்திய அக்ரகமி மகிளா சமிதி என்றும், பழங்குடியினர் அமைப்பு அக்ரகமி ஆதிவாசி சமிதி என்றும் அழைக்கப்படுகிறது.

கட்சியில் பிளவு 

சுதந்திரத்திற்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட தொடங்கியது. வாரணாசி கூட்டத்தில் "பார்வர்ட் பிளாக் இனி காங்கிரஸுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும், பாகிஸ்தானில் உள்ள கிளைகளில் இருந்து தனிக் கட்சியை உருவாக்க வேண்டும்" என்றும் முடிவு செய்து தன்னை ஆதரிப்பவர்களை வைத்து தனி கட்சி தொடங்கினார். இவர்கள் தங்களை 'சுபாசிஸ்ட்கள்' என்று அழைத்துக் கொண்டனர்.

1955ல், காங்கிரஸ் சோசலிசத்தை தனது கொள்கையாக ஏற்றுக்கொண்டதால், யாகீ மற்றும் சிங் போன்ற தலைவர்கள்,பார்வர்ட் பிளாக்கை காங்கிரஸ் உடன் இணைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தனர். சிங்கும் யாகீயும், மத்திய குழுவையோ அல்லது கட்சி உறுப்பினர்களையோ கலந்தாலோசிக்காமல், பார்வர்ட் பிளாக் காங்கிரஸில் இணைவதாக அறிவித்தனர். இதற்கு உடன்படாத மத்திய குழு சிங் மற்றும் யாகீயை வெளியேற்றியது.

தமிழ்நாட்டில் கட்சித் தலைவரான முத்துராமலிங்கத் தேவர் 30 அக்டோபர் 1963 அன்று இறந்த பின், அவரது சீடர்களான சசிவர்ண தேவர் மற்றும் பி.கே.மூக்கையா தேவர் இடையே அதிகாரப் போட்டி தொடங்கியது . இதில் மூக்கையா தேவர் வெற்றி பெற்றார். இதன் பின் சுபாசிஸ்ட் ஃபார்வர்டு பிளாக் என்ற கட்சியயை சசிவர்ண தேவர் தொடங்கினார். 

subash chandra bose with muthuramalinga thevar

1968 ஆம் ஆண்டில், சுதந்திரக் கட்சியுடன் ஒத்துழைப்பதன் மூலம் பார்வர்ட் பிளாக் அதன் சோசலிசக் கொள்கைகளில் இருந்து விலகிவிட்டதாக குற்றம் சாட்டி தமிழ்நாட்டின் கட்சியின் செல்வாக்கு மிக்க இரு தலைவர்களான வேலாயுதம் நாயரும், எஸ்.ஆண்டி தேவரும் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர ஃபார்வர்ட் பிளாக்கை நிறுவினர்.

1971 நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் தலைவர் ஹேமந்த குமார் போஸ் கொல்கத்தாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதன் பின் கட்சியின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த பி.கே.மூக்கையா தேவர் தேர்வு செய்யப்பட்டார்.

2006 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பார்வர்டு பிளாக் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஜெயந்தா ராய் மற்றும் மேற்கு வங்க முன்னாள் விவசாய அமைச்சரான சாயா கோஷ் தலைமையிலான கட்சியின் ஒரு பகுதி பிரிந்து இந்திய மக்கள் பார்வர்டு பிளாக்கை உருவாக்கியது. இந்தக் கட்சி காங்கிரஸுடன் தன்னை இணைத்துக் கொண்டது.

தேர்தல் களத்தில் :

1946 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற தேர்தலின் பொது பார்வர்டு பிளாக் மீதான தடை நீக்கப்பட்டது. பார்வர்டு பிளாக்கை சேர்ந்த எச்.வி.காமத் அரசியல் நிர்ணய சபையில் ஒரு இடத்துக்கு தேர்ந்தேடுக்கப்பட்டார். ஜோதிஷ் சந்திர கோஷ், ஹேமந்த குமார் பாசு மற்றும் லீலா ராய் ஆகியோர் பெங்கால் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேவருக்கு இந்துத்துவ சாயம் பூசுகிறார்கள் - அதுவும் தேர்தல் நேரத்தில் - கருணாஸ்

தேவருக்கு இந்துத்துவ சாயம் பூசுகிறார்கள் - அதுவும் தேர்தல் நேரத்தில் - கருணாஸ்


1971 நாடளுமன்ற தேர்தலில் , பார்வர்டு பிளாக் நாடு முழுவதும் 24 வேட்பாளர்களை நிறுத்தியது. ராமநாதபுரத்திலிருந்து பி.கே.மூக்கையா தேவர் மற்றும் நாக்பூரிலிருந்து ஜம்புவந்த்ராவ் தோத்தே ஆகியோர் வெற்றி பெற்றனர்.

1971ம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டது. ஆனால் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

1971ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பி.கே.மூக்கையா தேவர் உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்றார். 1972 ம் ஆண்டு கட்சி முதன்முறையாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தின் மேலவையில் ஒரு இடத்தைப் பெற முடிந்தது.

muthuramalinga thevar with mookkaiya thevar

1972 ம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில்பார்வர்டு பிளாக் 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை. 1972 ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், 26 இடங்களில் போட்டியிட்டு, இரு தொகுதிகளை வென்றது.

1977 நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டு மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2004 நாடாளுமன்ற தேர்தலில், மேற்கு வங்கத்திலிருந்து 3 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, 0.4% வாக்குகளையும் பெற்றது.

karthik

2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்த நடிகர் கார்த்திக்கு தமிழ்நாடு மாநில தலைவர் மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, 'கட்சி விரோத நடவடிக்கைகள்' காரணமாக கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.