இந்த ஆட்சி சொன்னதை செய்யும்,செய்வதை தான் சொல்லும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த ஆட்சி சொன்னதை செய்யும்,செய்வதை தான் சொல்லும்,மேலும் சொல்லாததையும் செய்யும் என அனைத்திந்தியக் கட்டுநர் சங்கத்தின் 30-வது மாநாட்டை தொடக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் 30-வது கட்டுநர் சங்கத்தின் மாநாட்டை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் கரிகாலன் விருது வழங்கப்படும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு வாக்குறுதி தந்தார்கள்.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அது நடக்காமல் போய்விட்டது.
இப்போது மீண்டும் ஆட்சி மாற்றம் வந்திருக்கிறது.எனவே,நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.கலைஞர் என்ன உறுதிமொழி கொடுத்தாரோ,அது நிச்சயம் நிறைவேற்றப்படும்.
இந்த ஆட்சி சொன்னதை செய்யும்,செய்வதை தான் சொல்லும் என்று கலைஞர் அவர்கள் எந்த அடிப்படையிலே அந்த உறுதிமொழியை மக்களிடத்திலெ தந்தாரொ,அதை இன்றைக்கு நாங்கள் கூடுதலாக நிறைவேற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.
சொன்னை மட்டுமல்ல,செய்வதை மட்டுமல்ல,சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி,ஏனென்றால்,தாய் 8 அடி பாய்ந்தால்,குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள்.
16 அடி பாய்ந்தால் எங்கள் தலைவருக்கு அது பெருமை இல்லை,32 அடி பாய்ந்தால் தான் எங்கள் தலைவருக்கு பெருமை கிடைக்கும்.
இதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுநர்கள் குறைந்த விலையில் மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.