தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை மழை பாதிப்பு
ஞாயிறு, திங்கள் அன்று பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
நிலைமை மெதுவாக சீராக வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பாதிக்கபட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மத்திய 12.20 மணி முதல் 1.10 மணிவரை ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் தலைமை செயலகம் வந்தடைந்தார்.
ராஜ்நாத் சிங் உறுதி
தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
முன்னதாக தமிழகத்திற்கு நிர்வாண தொகையாக நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.510 கோடி நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.