அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும்: புதுவை அரசு உத்தரவு!

corona pondicheery
By Irumporai Jun 14, 2021 03:52 PM GMT
Report

ஜூன் 16 முதல் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரவேண்டுமென புதுவை அரசு திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான புதுவையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு  குறைந்து வருகிறது.

அங்கு கடந்த வாரமே மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும், மக்களின் இயல்பு நிலையும் படிப்படியாக திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை 50 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டுமென புதுவை அரசு உத்தரவிட்ட நிலையில் ஜூன் 16ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வர வேண்டுமென்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

அதே நேரத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவையை அடுத்து தமிழகத்தில் மிக விரைவில் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வரலாம் என்ற அறிவிப்பு வெளிவரும் என எதிர்க்கப்படுகிறது.