அனைவரும் அர்ச்சகராக தடையில்லை..உச்சநீதிமன்றம் அதிரடி

Tamil nadu Supreme Court of India
By Karthick Aug 22, 2023 08:11 AM GMT
Report

ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

வழக்கு   

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

all-can-become-pusari-sc

அவர் தாக்கல் செய்த மனுவில், "அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், சுகனேஸ்வர் கோயில் ஆகம விதிகளின் அடிப்படையில் இல்லை" என கூறியிருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், "யார் வேண்டுமாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை" என்றார்.

உச்சநீதிமன்றம் அதிரடி

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதிக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

all-can-become-pusari-sc

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, ஆகம விதிகளின் படி தேர்ச்சி பெரும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என தெரிவித்துள்ளது.