இந்தி தெரிந்தால் சண்டை போடலாம் : பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லாவிற்கு அபராதம்
பாஜக நிர்வாகி அலிசா அப்துல்லாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அலிசா அப்துல்லா
இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பற்றி எரிந்துகொண்டிருந்த சூழலில் பாஜகவை சேர்ந்த அலிஷா அப்துல்லா பெண்கள் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்பது குறித்து பேசியது இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காரணம் அவர் அளித்த பேட்டியில் டெல்லியில் மாலை 9 மணிக்கு ஒரு பெண் தனியாக போகும் போது ஆண்கள் வந்து டார்ச்சர் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
சர்ச்சை பேச்சு
அந்த நேரத்தில் இந்தி தெரிந்திருந்தால் அவர்களிடம் கெட்டவார்த்தை பேசி நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்என பேசியிருந்தார் இது கடும் சர்ச்சையினை கிளப்பியது.பிரபல ரேசிங் வீராங்கனை அலிஷா அப்துல்லா பெண்களை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்த பாஜகவில் இணைந்ததாக கூறினார்.

காவல்துறை அபராதம்
இந்த நிலையில் அலிஷா அப்துல்லாவின் கார்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்,
அலிசாவின் கார்கள் குறித்து ஆய்வு செய்த போது ஆர்.டி.ஓ பதிவுப்படி காரின் கலர் அல்லாமல் வேறு கலர் மாற்றி இருப்பதும், காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது குறித்தும் விளக்கம் கேட்டு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.