சீனாவின் மிக வயதான மூதாட்டி காலமானார் - வயது என்ன தெரியுமா?

alimihanseyiti
By Petchi Avudaiappan Dec 18, 2021 06:14 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சீனா
Report

சீனாவின் மிக வயதான நபராக அறியப்பட்ட அலிமிஹான் செயிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.

சீனாவின் தென்மேற்கு ஜின்ஜியாங்கின் கஷ்கர் நகரை சேர்ந்த அலிமிஹான் என்ற மூதாட்டி 1886 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அலிமிஹான் தான் சீனாவின் மிக வயதான நபர் என்று சீனா அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இவர் தனது 135வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். மரணம் அடையும் வரையில் எளிய வாழ்க்கை வாழ்ந்த அலிமிஹான் நேரத்திற்கு சரியாக சாப்பிடுவதோடு, சூரிய ஒளியில் அடிக்கடி அமர்வது அவரது ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் என்று ஒரு நேர்காணல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் வசித் கொமுசெரிக் பகுதி மிக வயதானவர்கள் வாழும் இடமாக இன்றும் கருதப்படுகிறது. இங்கு 90 வயதை தாண்டியும் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு சுகாதார சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.