மேகங்களில் நின்ற வேற்றுக்கிரக வாசிகள் - வைரலாகும் வீடியோ!

Viral Video Flight World Alien
By Sumathi Jan 04, 2025 09:30 AM GMT
Report

மேகங்கள் மீது ஏலியன்கள் நின்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஏலியன்கள் 

பூமிக்கு வெளியே எதாவது உயிரினங்கள் உள்ளனவா என்பது மக்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்து வருகிறது. பூமியைத் தவிர நிச்சயம் மற்ற இடங்களிலும் வேறு உயிரினங்கள் வாழும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

aliens

ஆனால். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கோஹினூர் வைரத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? அறியாத பல தகவல்கள்!

கோஹினூர் வைரத்தின் உரிமையாளர் யார் தெரியுமா? அறியாத பல தகவல்கள்!

அதிர்ச்சி வீடியோ

ஆனால், அப்படி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. வேற்று கிரக வாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில், மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ விமானத்தில் செல்லும்போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்

மேகங்களில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று பேர் நிற்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி விவாத பொருளாக மாறியுள்ளது.