ஏலியன்கள் பூமிக்கு வந்ததற்கு ஆதாரம் இல்லை - அமெரிக்கா
ஏலியன்கள் பூமிக்கு வந்தற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ஏலியன்கள் வருகை :
ஏலியன்கள் குறித்த அறிக்கைகளை விசாரிப்பதற்காக அமெரிக்காவின் பென்டகன் எடுத்த முயற்சியில், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்ததாகவோ அல்லது இங்கு விபத்துக்குள்ளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது.

அமெரிக்கா விளக்கம்
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம், ஜூன் 2021 இல் வெளியிட்ட அறிக்கையில் 2004 மற்றும் 2021 க்கு இடையில், 144 யுஎஃப்ஒக்கள்(அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்) கண்டறியப்பட்டதாகவும் அவற்றுள் சென்சார்கள் மூலம் 80 யுஎஃப்ஒக்கள் படம் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
மேலும் ,இதுவரை நாங்கள் எந்த வேற்றுகிரக வாசிகளையும் பார்க்கவில்லை, இதனை கூறுவதற்கு நாங்கள் இன்னும் ஆரம்ப நிலையில்தான் இருக்கிறோம், இது குறித்து இன்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்