3 மாதங்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்ட அலிபாபா நிறுவனர் ஜாக் மா
அலிபாபா நிறுவனர் ஜாக்மா கடந்த இரண்டு மாதங்களாகக் காணவில்லை என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின, இந்த நிலையில் தற்போது ஜாக்மா வீடியோ வெளியிட்டுள்ளார். அலிபாபா நிறுவனர் ஜாக் மாவுக்கு சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாகவும் இதனால் கடந்த 3 மாதங்களாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்திகள் வெளியாகின.
மேலும் ஜாக் மா, சீன அரசின் கட்டுப்பாட்டில், வீட்டுச் சிறையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா பொது வெளியில் தோன்றி. ஜாக் மா பொது வெளியில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வீடியோ பதிவில் கொரோனா காலம் முடிந்த பிறகு மீண்டும் சந்திப்போம் எனதெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் தொடர் தாக்குதல் நடத்திய காரணத்தினால், கடந்த சில மாதங்களாக அலிபாபா நிறுவனர் ஜாக் மா வெளியில் வராமலே இருந்த நிலையில் தற்போது 3 மாதங்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டுள்ளார் ஜாக்மா
#JustIn: Chinese state media releases Jack Ma's video? in which he is 'interacting with rural teachers'. He says 'we will meet after pandemic is over.' Ma has not been seen in public since October 2020. #JackMa #jackmamissing #Alibaba#China #antgrouppic.twitter.com/rgDntWVBmG
— Annu Kaushik (@AnnuKaushik253) January 20, 2021