இணையத்தில் வைரலாகும் ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமண புகைப்படம். வீடியோ - குவியும் வாழ்த்துக்கள் - ரசிகர்கள் மகிழ்ச்சி
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்களது குடியிருப்பில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பாலிவுட் பிரபலங்கள் சிலரை அழைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர், கரன் ஜோகர் உள்ளிட்ட சில பிரபலங்களும் வந்திருக்கின்றனர்.
திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை மிக பிரம்மாண்டமாக நடத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி முடிவு செய்துள்ளார்களாம்.
தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள், வீடியோ -
#WATCH | Actors Alia Bhatt and Ranbir Kapoor make their first public appearance after tying the knot in Mumbai, today. pic.twitter.com/yQP5bTDnvM
— ANI (@ANI) April 14, 2022