பிரபல நடிகையை கல்யாணம் செய்துக் கொண்ட ரன்பீர் கபூர் - கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்

aliabhatt ranbirkapoor RanbirkapoorWedsAliabhatt
By Petchi Avudaiappan Apr 14, 2022 06:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் நேற்று கோலகலமாக நடைபெற்றது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் - ஆலியா பட் காதல் உறவில் இருந்து வந்தனர். இருவரும் அடிக்கடி வெளி இடங்களில் சுற்றும் போட்டோக்கள் வெளியான நிலையில் காதலிப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். 

தற்போது பிரம்மாஸ்த்ரா படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே ரன்பீருக்கும் ஆலியா பட்டுக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதலில் ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக திருமண தேதி மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில்  ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி ஹல்தி மற்றும் மெஹந்தி நிகழ்வு ரன்பீர் கபூர் வீட்டில் நடைபெற்றது . நான்கு புரோகிதர்கள் முன்னிலையில் திருமணத்தில் ஆலியா-ரன்பீர் கபூர் ஏழு முறை சுற்றி வந்து திருமணம் செய்து கொண்டனர். 

திருமணத்தில் விருந்தினர்களுக்காக 50 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 50 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருமண புகைப்படத்தை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் இன்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் எங்களுக்கு பிடித்த இடமான, எங்கள் உறவின் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த பால்கனியில் - நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகு இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிலையில், அங்கிருந்து வீட்டிற்குள் ஆலியாவை ரன்பீர் கபூர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.