பிரபல ஹிந்தி பட நடிகை படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
ஹிந்தியில் டியர் சிந்தகி, ராசி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்று, பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ஆலியா பட்.
இவர் ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளரும் கதையாசிரியருமான மகேஷ் பட்டின் மகள் ஆவார்.
தற்போது ஆலியா ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பிரபல ஹிந்தி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘கங்குபாய் கத்யாவாடி’நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
1960களில் மும்பையிலுள்ள காமாட்டி புரத்தில் வாழ்ந்த பெண் தாதா கங்குமாய் பற்றியதே இப்படத்தின் கதை.
படத்தில் கங்குமாய் விபச்சாரம் செய்வது போலக் காட்டியிருப்பதாகக் கூறி கங்குமாயின் குடும்பத்தினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
"இந்தப் படத்தில் என் அம்மா ஒரு விலைமகளாக மாற்றப்பட்டுள்ளார். ஆனால், மக்கள் இப்போது என் அம்மாவைப் பற்றிப் புகழ்ந்து பேசும் விஷயங்களைச் சொல்கிறார்கள்" என கங்குமாயின் வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குபாயின் குடும்ப வழக்கறிஞர் நரேந்திரன் கூறுகையில்,
“ டிரைலர் வெளியானதிலிருந்தே ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கங்குபாய் சித்தரிக்கப்பட்ட விதம் முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது, இது கொச்சையானது.
ஒரு சமூக ஆர்வலரை விலைமகளாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எந்தக் குடும்பம் அதை விரும்பும்? படத்தில் கங்குபாயை மாஃபியாவாக ஆக்கிவிட்டார்கள்” என கவலை தெரிவித்துள்ளார்.