ரெட்லைட் ஏரியாவில் பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி
ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ’கங்குபாய் கத்தியவாடி’ படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியில் பிரபல நடிகையாக திகழும் ஆலியா பட் அடுத்ததாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நிஜ சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள கங்குபாய் கத்தியவாடி படத்தில் பாலியல் தொழிலாளியாக இருந்து அரசியலில் ஈடுபட்ட நபரைக் குறித்து திரைக்கதையாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
இதில் பாலியல் தொழிலாளியாக ஆலியா பட் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிக்க தனது கதாபாத்திரத்தின் தேவையை அறிந்து கொள்ள மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவிற்கு சென்ற ஆலியா பட் அங்குள்ள பாலியல் தொழிலாளிகளுடன் பேசி, பழகி அவர்களது நடை, உடை, பாவனைகளை கற்றுக்கொண்டுள்ளார். இதனால் இந்தப்படத்தின் ட்ரெய்லரில் ஆலியா பட்டின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.