நடிகை அனுஷ்காவின் தொடை அழகு எல்லோரையும் மயக்கிடும் - காமெடி நடிகர் சர்ச்சை பேச்சு
நடிகை அனுஷ்காவின் தொடை அழகு எல்லோரையும் மயக்கிடும் என காமெடி நடிகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் அறிமுகம்
முதன் முதலில் சூப்பர் எனும் திரைப்படத்தில் 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்தார்.
கடந்த 10 வருடங்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார்.
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது.
மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார்.
ஆபாசமாக வர்ணித்த நடிகர்
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இஞ்சி இடுப்பழகி. இப்படம் தெலுங்கில் சைஸ் ஸிரோ என்ற தலைப்பில் வெளியானது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் அலி, நடிகை அனுஷ்காவை பற்றியும் அவரது அழகை பற்றி மோசமாக வர்ணித்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
அவர் அனுஷ்காவை பற்றி பேசுகையில், அனுஷ்கா ஜிலேபி போன்றவர் என்றும் எல்லோரும் அவரை விரும்புவார்கள் அத்தோடு அனுஷ்காவின் தொடை அழகு எல்லோரையும் மயக்கிடும் என ஆபாசமாக பேசினார்.
பெரும் சர்ச்சையான இந்த சமாச்சாரம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.