"தேவையில்லாமல் பேசாதீர்கள்" - இந்திய அணிக்கு சப்போர்ட் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்

Indian team World test championship Alastair Cook
By Petchi Avudaiappan Jul 02, 2021 10:33 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தனது முழுப் பங்களிப்பை வழங்கியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலஸ்டேர் குக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் இந்திய அணி மீது விழுந்தது.

 "தேவையில்லாமல் பேசாதீர்கள்" - இந்திய அணிக்கு சப்போர்ட் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர் | Alestair Cook Supports Indian Team

விராட்கோலி தலைமையில் இந்திய அணி சொதப்பி வருகிறது என்றும், இந்திய அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றும் என ஒவ்வொருவரும் ஒரு ஒரு காரணங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உண்மையில் இந்திய அணி மிக சிறப்பாக அதனால் முடிந்தவரை இறுதிப் போட்டியில் விளையாடியது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலஸ்டேர் குக் கூறியுள்ளார்.

இந்திய அணி கிட்டத்தட்ட மூன்று மாதகாலமாக எந்தவித டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால் அவர்களுக்கு சிறிது டச் விட்டுப் போயிருந்தது என்றுதான் கூறவேண்டும். இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு முடிந்தவரை நெருக்கடியை இந்திய அணி இறுதிவரை கொடுத்துக்கொண்டே இருந்தது என்பது உண்மை என்று குக் தெரிவித்துள்ளார்.