சம்பவம் ஸ்டார்ட்..! அடுத்த 48 மணிநேரமும் மழை தான் - தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Dec 17, 2023 08:16 AM GMT
Report

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

வானிலை ஆய்வு மையம் 

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சம்பவம் ஸ்டார்ட்..! அடுத்த 48 மணிநேரமும் மழை தான் - தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! | Alert South Districts Continuous Rainfall 48Hours

இதனால் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகியவற்றின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு நேற்றும், இன்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

கனமழை பெய்யும்

இந்நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக பிரபல தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (தமிழ்நாடு வெதர்மேன்) தெரிவித்துள்ளார்.

சம்பவம் ஸ்டார்ட்..! அடுத்த 48 மணிநேரமும் மழை தான் - தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! | Alert South Districts Continuous Rainfall 48Hours

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் தமிழகத்தில் சம்பவம் தொடங்கியது. அடுத்த 48 மணி நேரத்தில் இடைவிடாது மழை பெய்யும். மாஞ்சோலை மலை மற்றும் கோதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை கவனிக்க வேண்டும். மணிமுத்தாறு & பாபநாசம் அணை இரண்டுமே உபரியாக இருக்கும். மாஞ்சோலை மலைப்பகுதியில் 30-50 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஞ்சோலை மலைகள் அத்தகைய காற்று அடிக்கும் அரக்கர்கள். கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தின் மறுபகுதியிலும் கனமழை பெய்யும். தாமிரபரணி, குழித்துறையில் வசிக்கும் மக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.