அலர்ட்! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் கொரோனா 2வது அலை வீரியம் அதிகரிக்குமாம்

covid19 tamilnadu wave
By Jon Mar 08, 2021 04:46 PM GMT
Report

தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டும் கொரோனா 2வது அலை ஏற்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 567 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டாவது அலை வீசும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அலர்ட்! தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மட்டும் கொரோனா 2வது அலை வீரியம் அதிகரிக்குமாம் | Alert Corona Wave Malignancy Increase Tamilnadu

பொது இடங்களில் மாஸ்க் அணியா விட்டால் உடனே அபராதம் வசூலிக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவும் வரும் நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர பிற மாநிலங்களிலிருந்து வருவோர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.