ஏம்மா நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன் வேற ஆளப்பாரு : ரசிகைக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கான்

Shah Rukh Khan
By Irumporai Feb 10, 2023 10:35 AM GMT
Report

ஷாருக்கான் நடிப்பில் வெளியான பாதான் படம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நல்ல வசூலை குவித்து வருகின்றது , இந்த நிலையில் பதான் படத்தை வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான ரசிகர்கள் ஷாருக்கானை டுவீட் செய்து வருகின்றனர்.

அவர்களில் ஒரு ரசிகை, ஷாருக்கானுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என ட்வீட் செய்திருந்தார்.

டேடிங் வரலாமா

அவரது ட்விட்டர் பதிவில் ஷாருக்கானிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை ஆனால் காதலர் தினத்தன்று உங்களுடன் டேடிங் செல்ல விருப்பம் ? என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்துள்ள ஷாருக்கான் தனது பதில் பதிவில் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள கேட்கவில்லை. ஆனால் காதலர் தினத்தன்று உங்களுடன் டேட்டிங் செல்ல விருப்பம்?" எனக் கேட்டுள்ளார்.

ஏம்மா நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன் வேற ஆளப்பாரு : ரசிகைக்கு ஷாக் கொடுத்த ஷாருக்கான் | Alentines Date Superstar Gives Funny Reply

ஷாருக் ஷாக் பதில்

அதற்கு பதில் அளித்துள்ள ஷாருக்கான், "நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன். நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் படத்தை பாருங்கள்" என்று ஜாலியாக கூறியுள்ளார். ரசிகையின் ட்விட்டர் பதிவுக்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கான், பதான் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு தொடர்ந்து நன்றி கூறி டுவீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதான் திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை கடந்துவிடும் என கூறப்படுகின்றது