சினிமா துப்பாக்கியால் சுட்ட பிரபல நடிகர் : ஒளிப்பதிவாளர் பலி, இயக்குநர் படுகாயம்

actoralecbaldwins
By Petchi Avudaiappan Oct 22, 2021 04:14 PM GMT
Report

ஹாலிவுட் படப்பிடிப்பில்  படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழந்ததோடு,  இயக்குநர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் தற்போது ஜோயல் சோசா இயக்கத்தில்  ரஸ்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் செட் அமைக்கப்பட்டு நடந்து வந்தது. இதில் படத்திற்காக தயாரிக்கப்பட்ட போலி துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுடும் காட்சியை நேற்று படமாக்கினார்கள்.

அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டு பாய்ந்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் பலியானார். இயக்குநர் ஜோயல் படுகாயம் அடைந்தார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படப்பிடிப்பு தளங்களில் துப்பாக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் இருக்கிறது. அப்படி இருந்தும் விபத்துகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. முன்னதாக தி கிரோ படப்பிடிப்பில் சினிமா துப்பாக்கியால் சுட்டதில் ப்ரூஸ் லீயின் மகன் பிரான்டன் லீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.