மது வணிகம் என்பது தொழு நோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது: பா.ம.க இளைஞரணி தலைவர் ராமதாஸ்

tamilnadu alcohol anubumani
By Irumporai Jun 10, 2021 11:15 AM GMT
Report

தமிழகத்தில் தனியார் மதுபானக் கடைகளை திறக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.கஇளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் வருவாயைப் பெருக்க, தமிழ்நாடு முழுவதும் தனியார் மதுபானக் கடைகளை (பார்) அதிக எண்ணிக்கையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக அரசு செயல்பட முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.

பொதுவாக ஆளுங்கட்சி புள்ளிகளால்தான் தனியார் மதுபானக் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது ஊரறிந்த ரகசியமாகும்.

தனியார் குடிப்பகங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருப்பது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தானதாகும்.

அதை பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். 

மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், தொழு நோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்கு ஒப்பானது என்று அண்ணா கூறினார்.

ஆகவே தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், மது ஆலைகளை மூடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.