இந்த நாடகம் எல்லாம் இங்கு எடுப்படாது - தமிழிசை காட்டம்!
மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகம், மக்கள் மத்தியில் எடுப்படாது என தமிழிசை கூறியுள்ளார்.
தமிழிசை
இது தொடர்பாக தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறியதாவது, 'தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன்; கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை' என, தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன்,
தமிழக முதல்வரை சந்தித்ததும், 'தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்' தேசிய மதுவிலக்கு குறித்து லோக்சபாவில், வி.சி.,- எம்.பி.,க்கள் இதுவரை பேசியது இல்லை. அப்பட்டமான அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது.
இந்த நாடகம்..
கூட்டணி அஸ்திவாரத்தில் குழிபறித்து, அசைத்து பார்க்க நினைத்தனர்; அது பலிக்கவில்லை என்றதும் மடைமாற்றி, மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகின்றனர். இதைதான் 'நீட்' விஷயத்திலும் செய்தனர்.
புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகின்றனர். முதலில், தி.மு.க.,வினரின் மது ஆலைகளை மூடிவிட்டு, மதுவிற்கு எதிராக போராட முன் வர வேண்டும். திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது. என்று தெரிவித்துள்ளார்.

Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan

இலங்கையில் ஆட்சி மாற்றம் : எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் : இப்படி கூறுகிறது ரணில் தரப்பு IBC Tamil
