தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப அலாரம் : ஹரியானா அரசு அறிவிப்பு

By Irumporai Dec 26, 2022 01:03 PM GMT
Report

தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப ‘அலாரம்’ அறிவிக்கும் வகையில், அரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கோவில்கள், மசூதிகளில் அதிகாலையில் எழுப்பும் வகையில் செயல்படும்படி அறிவித்துள்ளது.

அலாரம்

ஹரியானா மாநிலத்தில், 2023 மார்ச் மாதம் போர்டு பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பள்ளி சேர்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில், ஹரியானா அரசு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோவில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் அதிகாலையில், ‘அலாரம்’ ஒலிக்க அறிவித்துள்ளது.

கல்வித் துறை, சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளை அதிகாலை 4:30 மணிக்கு தங்கள் குழந்தைகளை எழுப்பும் வகையில், பெற்றோரைக் கேட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

தேர்வு எழுதும் மாணவர்களை எழுப்ப அலாரம் : ஹரியானா அரசு அறிவிப்பு | Alarm At The Time Of Examination Haryana Govt

கடிதம் அனுப்பிய அரசு

மேலும், மாணவர்கள் கல்வி கற்க கூடுதல் நேரம் கிடைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மற்றும் ஆசிரியர்கள் இணைந்து திட்டம் வகுக்க வலியுறுத்தி, அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும் மாணவர்கள் விழித்திருந்து படிக்கிறார்களா என்பதை வாட்ஸ்அப் குரூப் மூலம் ஆசிரியர்கள் விசாரிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்றால் பள்ளி நிர்வாகக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.